அறிவிப்பு: வீரத்தமிழச்சி செங்கொடி 10ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு – தலைமையகம் (சென்னை) | மகளிர் பாசறை

442

அறிவிப்பு: வீரத்தமிழச்சி செங்கொடி 10ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு – தலைமையகம் (சென்னை) | நாம் தமிழர் கட்சி – மகளிர் பாசறை

மூன்று தமிழர்களின் இன்னுயிரைக் காக்க தன்னுயிரை ஈந்த வீரத்தமிழச்சி செங்கொடியின் 10ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் வீரவணக்க நிகழ்வு நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை சார்பாக 28-08-2021 சனிக்கிழமை, காலை 10 மணியளவில் தலைமை அலுவலகத்தில் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் நடைபெறவிருக்கின்றது.

இந்நிகழ்வில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், மகளிர் பாசறை உள்ளிட்ட அனைத்துப் பாசறைகளின் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கொரோனா நோய்த்தொற்றுப் பரவல் தடுப்புக்கான தனிநபர் இடைவெளி, முகக்கவசம் அணிதல், தொற்றுநீக்கி திரவம் பயன்படுத்துதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நிகழ்வில் பங்கேற்கும் உறவுகள் அனைவரும் முழுமையாகப் கடைப்பிடிக்க வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி