அறிவிப்பு: தக்கார் ம.சோ.விக்டர் அவர்களின் நூல்தொகுப்பு வெளியீட்டு விழா – சீமான் சிறப்புரை | சென்னை
பன்னாட்டு தமிழர் முயற்சியில் தக்கார் ம.சோ.விக்டர் அவர்களின் 121 ஆய்வு நூல்களில் முதற்கட்டமாக 25 ஆய்வு நூல்கள் கொண்ட தொகுப்பு வெளியீட்டு விழா இன்று 09-01-2021 சனிக்கிழமை மாலை 05 மணியளவில், சென்னை, ஆர்.ஏ.புரத்தில் உள்ள திருவாடுதுறை டி.என்.இராஜரத்தினம் கலையரங்கத்தில் நடைபெறவிருக்கிறது. ஆய்வறிஞர்கள், பதிப்பகத்தார்கள் முன்னிலையில் நடைபெறும் இவ்விழாவில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்று நூல்தொகுப்பினை வெளியிட, தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் ஐயா பெ.மணியரசன் அவர்கள் முதல்படியை பெற்றுக்கொள்ளவிருக்கிறார்கள்.
நாம் தமிழர் உறவுகளும் இனமானத் தமிழர்களும் வருகை தந்து இவ்விழாவைச் சிறப்பிக்க வேண்டுகிறோம்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி