அறிவிப்பு: நவம்பர் 27, மாவீரர் நாள் ஈகியர் நினைவேந்தல் – போரூர்

349

அறிவிப்பு: நவம்பர் 27, மாவீரர் நாள் ஈகியர் நினைவேந்தல் – போரூர் | நாம் தமிழர் கட்சி

ஆயிரமாயிரம் ஆண்டுகள் அடிமையாக வாழ்வதைவிட, சுதந்திரமாகச் சாவது மேலானது; அதுவும் அந்த சுதந்திரத்திற்காகப் போராடிச் சாவது அதைவிட மேலானது! – என்று நம் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் இலட்சிய முழக்கங்களுக்கேற்ப தமிழீழ விடுதலைக்காகத் தம் இன்னுயிரையே கொடையாகக் கொடுத்த நம் மாவீரர்களின் நினைவைப் போற்றும் மாவீரர் நாள் ஈகியர் நினைவேந்தல், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில், நாளை 27-11-2020 (வெள்ளிக்கிழமை) மாலை 05 மணியளவில், சென்னை, போரூர்-கிண்டி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஸ்ரீஈஸ்வரி திருமண நிலையத்தில் (போரூர் எம்.ஜி.ஆர் மேம்பாலம் அருகில்) நடைபெறவிருக்கிறது.

Google Map https://bit.ly/MN2020Porur

மாவீரர் நாள் மரபுபடி மிகச்சரியாக மாலை 6.10 மணிக்கு மாவீரர் பாடல் ஒலிக்க, மாவீரர் சுடர் ஏற்றப்பட்டு, மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்படும். எனவே உறவுகள் குறித்த நேரத்திற்கு முன்பாகவே நிகழ்விடத்திற்கு வர வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

இந்நிகழ்வில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் அனைத்து பாசறைகளின் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் பேரெழுச்சியாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தமிழர்களின் தாகம்! தமிழீழத் தாயகம்!


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திபத்மநாபபுரம் தொகுதி – சட்டமன்றத் தேர்தல் பரப்புரை
அடுத்த செய்திஅம்பாசமுத்திரம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்