தொழிலாளர் நலச்சட்டங்களை மத்திய அரசு திருத்தி அமைத்திருப்பது தொடர்பாக அமைப்புசாரா தொழிலாளர்களின் தொழிற்சங்கக் கூட்டு நடவடிக்கை குழுவினர் சீமான் அவர்களுடன் சந்திப்பு

137

அமைப்புசாரா தொழிலாளர்களின் தொழிற்சங்கக் கூட்டு நடவடிக்கை குழுவின் மாநில அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு செயலாளர் ஆர்.லீலாவதி, டான்போஸ்கோ புலம்பெயர் தொழிலாளர் நல மைய இயக்குநர் அருட்தந்தை போஸ்கோ, மாநில உடலுழைப்பு தொழிலாளர்கள் சங்கச் செயலாளர் ஜெயபாலன், மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பின் தேசிய ஆலோசகர் அருள்தாஸ் ஆகியோர் இன்று 20-10-2020  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து தொழிலாளர் நலச்சட்டங்களை மத்திய அரசு திருத்தி அமைத்திருப்பது குறித்தும், அமைப்புசாரா தொழிலாளர் நலனுக்கு நாம் தமிழர் கட்சி துணை நிற்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இச்சந்திப்பில்  தமிழர் நலப் பேரியக்கத் தலைவர் சோழன் மு.களஞ்சியம், மருது மக்கள் இயக்கத் தலைவர் செ.முத்துப்பாண்டி, ஆகியோர் உடனிருந்தனர்.

அமைப்புசாரா தொழிலாளர் நலனுக்காக நாம் தமிழர் கட்சி எப்போதும் துணை நிற்கும் என தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் உறுதியளித்தார்.

முந்தைய செய்திகுளச்சல் தொகுதி – சுற்றுச்சூழல் பாசறை கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: பல்லடம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்