முக்கிய அறிவிப்பு: டிச.-01, மள்ளர் மீட்புக் களம் ஒருங்கிணைக்கும் பட்டியல் வெளியேற்றக் கோரிக்கை கவன ஈர்ப்பு ஒன்றுகூடல் – சென்னை (வள்ளுவர்கோட்டம்) | நாம் தமிழர் கட்சி
மருதநில வேந்தன் குலத் தோன்றல்களான மரபுவழி வேளாளர்களை தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை பிறப்பிக்க மாநில அரசை அறிவுறுத்தியும், தனி இடப்பங்கீட்டோடு பட்டியல் வெளியேற்றக் கோரிக்கையை நடைமுறைப்படுத்த மத்திய அரசை வலியுறுத்தியும், தமிழர் தாயகம் கட்சி-மள்ளர் மீட்புக் களத்தின் தலைவர் கு.செந்தில்மள்ளர் அவர்களின் தலைமையில் எதிர்வரும் 01-12-2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 03 மணியளவில் சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் கவன ஈர்ப்பு ஒன்றுகூடல் நடைபெறவிருக்கின்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்று .பட்டியல் வெளியேற்றக் கோரிக்கையை வலியுறுத்தி உரையாற்றுகிறார்.
இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாக ஒன்றுகூடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி