மணிப்பூரில் தொடரும் பழங்குடி மக்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்களைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – சீமான் கண்டனவுரை

180

பாஜக ஆளும் மாநிலமான மணிப்பூரில் குக்கி பழங்குடிப் பெண்கள் இருவர் பெரும்பான்மை மெய்தெய் இனத்தைச் சேர்ந்தவர்களால் ஆடையின்றி சாலையில் அடித்து, இழுத்துச்செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதைக் கண்டித்தும், ஆட்சியாளர்களின் துணையோடு மூன்று மாதங்களாகத் தொடரும் குக்கி பழங்குடி மக்களுக்கு எதிரான கட்டுக்கடங்காத வன்முறை வெறியாட்டங்களைக் கண்டித்தும், அதனைத் தடுக்கத் தவறிய இந்திய ஒன்றிய மற்றும் மணிப்பூர் மாநில பாஜக அரசுகளைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 30-07-2023 ஞாயிற்றுக்கிழமையன்று பிற்பகல் 02 மணியளவில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்தியாழ் இசை மற்றும் நுண்கலைக்கூடம் 10ஆம் ஆண்டு விழா – சீமான் வாழ்த்துரை
அடுத்த செய்திஅரியானா மாநிலத்தில் மதக்கலவரத்தை ஏற்படுத்தும் வன்முறையாளர்களை சட்டத்தின் துணையோடு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்