சுற்றறிக்கை: தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு – கலந்தாய்வு (அண்ணாநகர், எழும்பூர் தொகுதிகள்)

6

சுற்றறிக்கை: தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு – கலந்தாய்வு (அண்ணாநகர், எழும்பூர் தொகுதிகள்) | நாம் தமிழர் கட்சி

மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் மாவட்டவாரியாக தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு மற்றும் கலந்தாய்வுக் கூட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. அந்த வகையில், நாளை
05-07-2019 வெள்ளிக்கிழமை, காலை 11 மணியளவில் சென்னை மாவட்டத்திற்குட்பட்ட அண்ணாநகர், எழும்பூர் தொகுதிகளுக்கானப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு மற்றும் கலந்தாய்வு தலைமை அலுவலகமான இராவணன் குடிலில் நடைபெறவிருக்கிறது.

இதில் உட்கட்சிக் கட்டமைப்பை மறுசீராய்வு செய்வது குறித்தும், எதிர்வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைத் திறம்பட எதிர்கொள்ளும் பொருட்டு முன்னதாக மேற்கொள்ளவேண்டிய களப்பணிகள் குறித்தும் கலந்தாய்வு நடைபெறவிருக்கிறது.

எனவே அண்ணாநகர், எழும்பூர் தொகுதிகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், மாநிலக் கட்டமைப்புக் குழுப் பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.