அன்பின் பேரழைப்பு!

100

அன்பின் பேரழைப்பு!

ஆகத்து 5 அன்று நடைபெறும் வேலூர் பாராளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் நாம் தமிழரின் மாற்று அரசியலுக்கான பயணத்தின் மணி மகுடமாய் அமையவிருப்பது அம்மாற்று அரசியலை முன்வைக்கும் நம் அனைவரிடத்திலும் கையளிக்கப்பட்டிருக்கிறது.

மக்களுக்கு பணத்தை கொடுத்து எப்படியும் வாக்குகளை வாங்கி வெற்றி பெற்று விடலாம் என்ற எண்ணத்தில் வழக்கம்போல் போட்டி போட்டு களவாணி அரசியல் செய்யும் திமுக அதிமுக என்ற இரு பெரும் பண முதலைகளுக்கிடையே எளிய மக்களின் குரலாக ஏதுமற்ற ஒரு சாமானியனாக மாற்று அரசியல் முழக்கங்களோடு தனித்த பெண் புலியாக வீதியெங்கும் வலம் வரும் சகோதரி தீபலட்சுமி அவர்களின் வெற்றிக்கு நாம் அனைவரும் நம்மால் இயன்ற உதவிகளை செய்து தருவது மிகவும் அவசியமாகிறது.

சென்னையிலிருந்து வேலூருக்கு செல்ல அதிகபட்சம் 3 மணி நேரம் மட்டுமே செலவாகுமென்பதால் சென்னையை சார்ந்தவர்களும், தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து வந்து சென்னையில் தங்கி பணி புரியும் அனைவரும் வார நாட்களில் அல்லது குறைந்தபட்சம் எதிர் வரும் வார இறுதி நாட்களிலாவது வேலூருக்கு பயணப்பட்டு தேர்தல் பரப்புரையில் ஈடுபட பேரன்போடு அழைக்கிறோம்.

சென்னையிலிருந்து புறப்பட்டு காலையில் சென்றால் பரப்புரையை முடித்து விட்டு இரவு வீடு திரும்பி விடலாம். அப்படி அங்கு தங்க வேண்டும் என்றால் நாம் தமிழரின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தங்கும் இடங்களில் அந்தந்த சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களை தொடர்பு கொண்டு அதற்கு தகுந்தவாறு திட்டமிடலாம்.

தினக் கூலி வேலை செய்பவர்கள், மாதச் சம்பளம் வாங்குபவர்கள், சுய தொழில் செய்பவர்கள் என அனைத்து தரப்பு நாம் தமிழர் நண்பர்களும் இருக்கும் இந்த ஒரு வாரத்தில் குறைந்தபட்சம் இரண்டு நாட்களாவது ஒதுக்கி இப்பரப்புரையில் கலந்து கொள்ள திட்டமிடவும்.

தமிழகம் முழுக்க அந்தந்த சட்டமன்ற தொகுதிகளில் இருந்து குழுவாக பயணப்படும் நாம் தமிழர் உறவுகளுடன் தங்களை இணைத்துக் கொண்டு வேலூரை நோக்கி ஓடி வர அனைவருக்கும் அறைகூவல் விடுக்கிறோம்.

தவிர்க்க இயலாத காரணங்களால் தேர்தல் பரப்புரைக்கு நேரில் வர இயலாதவர்கள் தங்களுக்கு தெரிந்த வேலூர் தொகுதியைச் சார்ந்த நண்பர்களுக்கு அலைபேசி வாயிலாக அழைத்து ஆதரவை கோரிட வேண்டுகிறோம். அத்தோடு தங்களது பகிரி, முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களிலும் தொடர் பரப்புரையில் ஈடுபட கோருகிறோம்.

தேர்தல் களத்தில் கோடிகளை வாரி இறைக்கும் திமுக அதிமுக கும்பல்களுக்கிடையே பரப்புரைக்கு தேவைப்படும் சாதாரண அடிப்படை செலவுகளை செய்யவே தடுமாறும் நாம் தமிழர் உறவுகளுக்கு தங்களின் பங்களிப்பாக பொருளாதார உதவி புரிய அன்பு கொண்டு வேண்டுகிறோம்.

தேர்தல் நாளுக்கிடையில் இன்னும் குறைவான நாட்களே உள்ளதால் குறிப்பாக எதிர் வரும் சனி, ஞாயிறு என்ற ஒரு வார இறுதியே இருப்பதால் நாம் தமிழர் நண்பர்கள் தங்களால் இயன்ற பங்களிப்புகளை செய்ய உடனே திட்டமிடவும்.

நாம் தமிழரின் மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சியை இத்தேர்தல் மூலம் மெய்ப்பிக்க உலகெங்கும் பரவி வாழும் தாய்த் தமிழ் உறவுகள் இந்த தருணத்தில் அனைத்து வழிகளிலும் பேருதவி புரிந்திட அன்பின் பால் அழைக்கிறோம்.

தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உதவிக்கு:

வேலூர் சட்டமன்றத் தொகுதி:
வ.சி.கார்த்திகேயன், தொகுதித் தலைவர்
+91-9345318006
ச.வெங்கடேசன், தொகுதிச் செயலாளர்
+91-9025269205

அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி:
க.சிவராஜ், தொகுதித் தலைவர்
+91-9597062277
பெ.கண்ணன், தொகுதிச் செயலாளர்
+91-7010110094

கீழ்வைத்தியனான் குப்பம் சட்டமன்றத் தொகுதி:
சே.இராஜிவ்காந்தி, தொகுதித் தலைவர்
+91-9741448985
சு.நவீன், தொகுதிச் செயலாளர்
+91-9626238481

குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி:
நித்தியானந்தம், தொகுதித் தலைவர்
+91-9566938843
பாரதி, தொகுதிச் செயலாளர்
+91-9952017443

ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி:
ஆ.அயுப்கான், தொகுதித் தலைவர்
+91-9840282419
வெ.வெங்கட்ராமன், தொகுதிச் செயலாளர்
+91-9597751310

வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதி: சிவசுப்பிரமணியன், தொகுதித் தலைவர்
+91-8056745025
சதீஷ்குமார், தொகுதிச் செயலாளர்
+91-9944423237

தேர்தல் பரப்புரைக்கான பொருளாதார உதவி செய்திட:

ACCOUNT NAME: NAAM TAMILAR KATCHI
BANK NAME: AXIS BANK
ACCOUNT NUMBER: 916020049623804
IFSC CODE: UTIB0002909
MICR CODE: 600211076
SWIFT CODE: CHASUS33
BRANCH : MADURAVOYAL

புதியதொரு தேசம் செய்வோம்!
மக்கள் புரட்சியால் அதை உறுதி செய்வோம்!

#Vellore4Deepa #NTK4Change #விவசாயி #ITEWNTK

இப்படிக்கு
தேர்தல் பரப்புரைக் குழு
தகவல் தொழில் நுட்பப் பணியாளர்கள் பிரிவு – நாம் தமிழர்

முந்தைய செய்திஅறிவிப்பு: வேலூர் நாடாளுமன்ற வேட்பாளர் தீபலட்சுமி அவர்களின் பரப்புரைப் பயணத்திட்டம் | நாம் தமிழர் கட்சி
அடுத்த செய்திஅறிவிப்பு: சீமான் பங்கேற்கும் முதல்நாள் பரப்புரைப் பொதுக்கூட்டங்கள் | நாம் தமிழர் கட்சி