அறிவிப்பு: வில்லிவாக்கம் தொகுதிப் பொறுப்பாளர்கள் மாற்றம் | க.எண்: 2019030043

9

அறிவிப்பு: வில்லிவாக்கம் தொகுதிப் பொறுப்பாளர்கள் மாற்றம் | க.எண்: 2019030043 | நாம் தமிழர் கட்சி

மத்திய சென்னை மாவட்டம், வில்லிவாக்கம் தொகுதிச் செயலாளராக இருந்த கணேசன் (00330555442) அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, ஆரோன்தாஸ் (00330702273) அவர்கள் தொகுதிச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். அதேபோல் தொகுதிச் செய்தித்தொடர்பாளராக இருந்த சந்துரு (00330365877) அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, தொகுதி வணிகர் பாசறைச் செயலாளராக இருந்த இரா.பாலு (00330290890) அவர்கள், தொகுதிச் செய்தித்தொடர்பாளராக நியமிக்கப்படுகிறார். அவர் வகித்து வந்த தொகுதி வணிகர் பாசறைச் செயலாளர் பொறுப்பில் ந.ச.முருகன் (00560311910) அவர்கள் நியமிக்கப்படுகிறார்.

அயனாவரம் பகுதித் தலைவராக இருந்த இராமச்சந்திரன் (00330272625) அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, 96வது வட்டத் துணைத்தலைவராக இருந்த இரமேஷ் (05336305016) அவர்கள், அயனாவரம் பகுதித் தலைவராக நியமிக்கப்படுகிறார்.

94வது வட்டத் தலைவராக இருந்த இலட்சுமணன் (00560083844)  மறைவையடுத்து 94வது வட்டப் பொருளாளராக இருந்த கணேசன் (00560221639) அவர்கள் 94வது வட்டத் தலைவராக நியமிக்கப்படுகிறார்.

95வது வட்டச் செயலாளராக இருந்த பிரவின் (00330650665) அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, நரேஷ் (16601215369) அவர்கள் 95வது வட்டச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். அதேபோல் 95வது வட்ட துணைத்தலைவராக இருந்த முனிர்பாஷா (05336072075) மறைவையடுத்து க.இராஜேந்திரன் (00330907960) அவர்கள் 95வது வட்ட துணைத்தலைவராக நியமிக்கப்படுகிறார்.

புதிய பொறுப்பாளர்கள் விவரம் பின்வருமாறு;

தொகுதிச் செயலாளர்                    – ஆரோன்தாஸ் (00330702273)

தொகுதி செய்தித் தொடர்பாளர்            – இரா.பாலு(00330290890)

தொகுதி வணிகர் பாசறைச் செயலாளர்     – ந.ச.முருகன்(00560311910)

94வது வட்டத் தலைவர்                 – இரமேஷ்(05336305016)

95வது வட்டச் செயலாளர்               – நரேஷ்(16601215369)

95வது வட்டச் வட்ட துணைத்தலைவர்     – க.இராஜேந்திரன்(00330907960 )

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி