வில் வித்தைப் போட்டியில் உலகச் சாதனைப் படைத்த 3 வயது சிறுமி சஞ்சனா – சீமானுடன் சந்திப்பு

49

வில் வித்தைப் போட்டியில் உலகச் சாதனைப் படைத்த 3 வயது சிறுமி சஞ்சனா – சீமானுடன் சந்திப்பு

வடசென்னை வடக்கு மாவட்டம், இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 42வது வட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி உறுப்பினர் பிரேமநாதன் அவர்களின் அன்புமகள் உ.பி.சஞ்சனா, வில் வித்தைப் போட்டியில் 3 வயதிலேயே இரண்டு முறை உலகச் சாதனைப் படைத்துள்ளார். உலகச் சாதனைக்கான சான்றிதழை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களிடம் நேற்று (23-12-2018) திங்கட்கிழமை காலை 10 மனியளவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஐயா கக்கன் அவர்களின் நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வின்போது காண்பித்து அகமகிழ்ந்தார். சாதனைச் சிறுமி சஞ்சனாவுக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நாம் தமிழர் கட்சி சார்பாக வாழ்த்து கேடயம் வழங்கி புரட்சி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஎழுத்தாளர் பிரபஞ்சன் உடலுக்கு அரசு மரியாதை! – புதுச்சேரி அரசுக்கு சீமான் பாராட்டு
அடுத்த செய்திஅறிவிப்பு: டிச. 29, நாகையில் மாபெரும் தொடர் முழக்க கண்டன ஆர்ப்பாட்டம் | தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு