சென்னை – கள்ளிக்குப்பம்  மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம்

71

கட்சி செய்திகள்: சென்னை – கள்ளிக்குப்பம்  மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் | நாம் தமிழர் கட்சி

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக  மின்சாரம், குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, சாலை வசதி, குடிநீர் வசதி, வீட்டு வரி உள்ளிட்டவற்றிற்கு அரசின் அனுமதிபெற்று சென்னை – கள்ளிக்குப்பம் பகுதியில் உள்ள குடியிருப்புகளை, நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாகக் கூறி கடந்த 12-10-2018 அன்று தமிழக அரசு, மாற்று ஏற்பாடுகள் ஏதுமின்றி அவசர அவசரமாக அனைத்து வீடுகளையும் இடித்து தரைமட்டமாக்கியது. வீடிழந்த நிலையில் இருக்க இடமின்றி ஆதரவற்று துயருற்று நிற்கும் அப்பகுதி மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் இன்று 16-10-2018 செவ்வாய்க்கிழமை மாலை 04 மணியளவில் அம்பத்தூர் உழவர் சந்தை அருகில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வை மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தென்னரசன் மற்றும் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் மகேந்தரன் மற்றும் அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் ஒருங்கிணைத்தனர்.

செய்தியாளர் சந்திப்பு:

இதில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சசிகலா ஜெயராமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா – லெ விடுதலை) சார்பில் இர.மோகன் ஆகியோர் பங்கேற்று அப்பகுதி மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினார்கள்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

முந்தைய செய்திஅரசால் வீடிழந்து நிற்கும் சென்னை – கள்ளிக்குப்பம் பகுதி மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திகொடி ஏற்றும் நிகழ்வு-மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி