அறிவிப்பு: ‘நீட்’ தேர்வை நிரந்தரமாக விலக்கக் கோரி மாணவர்களின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

38

மே-03, கடலூரில் கூடுவோம்!
===========================================
‘நீட்’ தேர்வை நிரந்தரமாக விலக்கக் கோரி மாணவர்களின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – சீமான் பங்கேற்பு | நாம் தமிழர் கட்சி
===========================================

நீட் தேர்வை நிரந்தரமாக விலக்கக் கோரியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மே-3, வியாழக்கிழமையன்று காலை 10 மணியளவில் ‘தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தமிழர் உரிமைக்கான மாணவர்கள், இளைஞர்கள் கூட்டமைப்பு’ சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் திடலில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது. இயக்குநர் வ.கௌதமன் ஒருங்கிணைக்கும் இந்நிகழ்வில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ.மணியரசன், மீத்தேன் திட்ட எதிர்ப்பு இயக்கம் பேராசிரியர் த.ஜெயராமன், இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன், சுரேஷ் காமாட்சி, வீ.சேகர், பேரரசு மற்றும் பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்று கண்டனவுரையாற்றுகிறார்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழின உணர்வாளர்களும், உழவர் பெருமக்களும், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களும் பெருந்திரளாக பங்கேற்க வேண்டுமென அன்புரிமையுடன் அழைக்கிறோம்.

அவ்வயம் கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

“தங்கை அனிதாவின் நினைவைச் சுமந்து கனவை நோக்கி ஒன்று கூடுவோம்.”


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி