சுற்றறிக்கை: சீமானுடன் மாவட்டவாரியாக பொறுப்பாளர்கள் சந்தித்தல் தொடர்பாக

226

சுற்றறிக்கை: சீமானுடன் மாவட்டவாரியாக பொறுப்பாளர்கள் சந்தித்தல் தொடர்பாக | நாம் தமிழர் கட்சி

பிப்ரவரி 15ஆம் தேதி முதல் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மாவட்டவாரியாக அனைத்துநிலை பொறுப்பாளர்களையும் சந்தித்து கட்சியின் உட்கட்டமைப்பை முறைபடுத்தவிருப்பதால் தலைமைக்கு ஒத்துழைப்பு நல்கி உடனடியாக அனைத்துநிலை பொறுப்பாளர்களின் பெயர் மற்றும் விவரங்கள் அடங்கியப் பட்டியலை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இச்சந்திப்பு நமது கட்சியின் உட்கட்டமைப்பைச் சீராக்கி மென்மேலும் வலுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படுகிறது. ஆகவே மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்கள் தங்களது மாவட்டத்திற்குட்பட்ட தொகுதி, மாநகர, நகர, பேரூராட்சி, ஒன்றியம், ஊராட்சி, வட்டம், கிளை குறித்த விவரங்கள் அடங்கிய தொகுதி உட்கட்டமைப்புப் பட்டியலை விரைந்து தலைமை அலுவலகத்திற்கு அஞ்சல் மூலமோ நேரடியாகவோ அல்லது (ravanankudil@gmail.com) மின்னஞ்சல் மூலமாகவோ பிப்ரவரி 10ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

தொகுதி உட்கட்டமைப்புப் பட்டியலை தலைமை அலுவலகத்திற்கு குறித்த காலத்திற்குள் விரைந்து அனுப்பிவைப்பதன் அடிப்படையில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உடனான கலந்தாய்விற்கு மாவட்டவாரியாக அழைக்கப்படும். கலந்தாய்விற்கான மாவட்டம் மற்றும் நாள் உள்ளிட்ட விவரங்கள் பிப்ரவரி 12ஆம் தேதியிலிருந்து சுற்றறிக்கை மூலம் அறிவிக்கப்படும்.

குறிப்பு: உட்கட்டமைப்பு பொறுப்புகளுக்கு பரிந்துரைக்கப்படும் பொறுப்பாளர்கள் பற்றிய விவரங்களை நிரப்புவதற்கான படிவம் இணைக்கப்பட்டுள்ளது.

http://naamtamilar.org/downloads/senthilkumar-notification-naam-tamilar-katchi-30-01-2018.pdf


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4384

முந்தைய செய்திபன்னாட்டு அரிமா சங்கம் – நாமக்கல் மண்டல சந்திப்பு – சீமான் சிறப்புரை
அடுத்த செய்திஅறிவிப்பு: அரியலூர் திரு. பீட்டர் பெர்னாண்டஸ்-க்கும் கட்சிக்கும் எந்த தொடர்புக்கும் இல்லை