அறிவிப்பு: ஓகி புயலில் காணாமல் போன தமிழக மீனவர்களை உடனடியாக மீட்கக்கோரி ஆர்ப்பாட்டம் – சென்னை துறைமுகம்

120

அறிவிப்பு: ஓகி புயலில் காணாமல் போன தமிழக மீனவர்களை உடனடியாக மீட்கக்கோரி ஆர்ப்பாட்டம் – சென்னை துறைமுகம் | நாம் தமிழர் கட்சி

ஓகி புயலில் காணாமல் போன தமிழக மீனவர்களை உடனடியாக மீட்கக்கோரி மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தியும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரியும் நாம் தமிழர் கட்சி சார்பில் நாளை 13-12-2017 (புதன்கிழமை) காலை 10 மணிக்கு, சென்னை துறைமுகம் சிங்காரவேலர் மாளிகை அருகில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த கட்சிகள், இயக்கங்கள் பங்கேற்கின்றன.

அவ்வயம் மாநில, மண்டல, மாவட்ட, வட்ட, நகர, ஒன்றிய, பகுதி, கிளை நிர்வாகிகள் மற்றும் இளைஞர், மகளிர், மாணவர், வீரத்தமிழர் முன்னணி, மருத்துவர், குருதிக்கொடை, வழக்கறிஞர், உழவர், தொழிலாளர், மீனவர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கையூட்டு-ஊழல் ஒழிப்பு உள்ளிட்ட அனைத்து பாசறைகளின் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நாள்: 13-12-2017 (புதன்கிழமை)
நேரம்: காலை 10 மணி
இடம்: சிங்காரவேலர் மாளிகை அருகில், சென்னை துறைமுகம்
தொடர்புக்கு: 9092617178 / 9600709263

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

முந்தைய செய்திஅறிவிப்பு: ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 13-12-2017 13வது நாள் | சீமான் பரப்புரைத் திட்டம்
அடுத்த செய்திஅறிவிப்பு: ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 14-12-2017 14வது நாள் சீமான் பரப்புரைத் திட்டம்