அறிவிப்பு: ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 14-12-2017 14வது நாள் சீமான் பரப்புரைத் திட்டம்

34

அறிவிப்பு: ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 14-12-2017 14வது நாள் சீமான் பரப்புரைத் திட்டம் | நாம் தமிழர் கட்சி

வருகின்ற டிசம்பர் 21ஆம் நாள் நடைபெறவிருக்கும் ஆர்.கே நகர் இடைதேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளர் கா.கலைக்கோட்டுதயம் அவர்கள் மெழுகுவர்த்திகள் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். இதனையொட்டி கடந்த 01-12-2017 முதல் நமது கட்சியின் தேர்தல் பரப்புரைப் பணிகள் முழுவீச்சில் தொடங்கி தொடர்ந்து 13 நாட்களாக நடைபெற்றுவருகிறது.

14வது நாள் 14-12-2017 (வியாழக்கிழமை) பரப்புரை மேற்கொள்ளவிருக்கும் திட்டவிவரம்:

நேரம்: காலை 09:30 மணி முதல் பகல் 12 மணிவரை வீடு வீடாக வாக்கு சேகரிப்பு
துவங்குமிடம்: 40வது வட்டம், சௌந்தரபாண்டியன் சுப்பம்மாள் பெண்கள் மேனிலைப்பள்ளி, சிவகாமி நகர், மங்கம்மாள் தோட்டம், சிவன் நகர், ஜீவா நகர், சுனாமி குடியிருப்பு.

நேரம்: பிற்பகல் 02:30 மணி முதல் மாலை 05 மணிவரை வீதிப்பரப்புரை
துவங்குமிடம்: 40வது வட்டம், வ.உ.சி நகர் கடை வீதி, திருவள்ளுவர் குடியிருப்பு, ஒத்தவாடை.

நேரம்: மாலை 06 மணிக்கு பரப்புரைப் பொதுக்கூட்டம்
எழுச்சியுரை: சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர்
இடம்: 40வது வட்டம், வ.உ.சி நகர் கடை வீதி
தொடர்புக்கு: சம்பத்: 9444125013 / மணிகண்டன்: 8248078484

கும்மிடிப்பூண்டி, மாதவரம், மயிலாப்பூர் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல் மாவட்டப் பொறுப்பாளர்கள் பரப்புரைப் பணிகளில் இடைத்தேர்தல் பணிக்குழுவோடு இணைந்து செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அனைத்து தொகுதி நாம் தமிழர் உறவுகளும் ஆர்.கே நகர் தொகுதி தேர்தல் பரப்புரைகளில் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு உரிமையோடு கேட்டுக்கொள்கிறோம்.

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

முந்தைய செய்திஅறிவிப்பு: ஓகி புயலில் காணாமல் போன தமிழக மீனவர்களை உடனடியாக மீட்கக்கோரி ஆர்ப்பாட்டம் – சென்னை துறைமுகம்
அடுத்த செய்திஒகி புயலில் காணாமல் போன மீனவர்களை மீட்கக்கோரி சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம்