அறிவிப்பு: அப்துல் கலாம் 2ஆம் ஆண்டு நினைவைப்போற்றும் பொதுக்கூட்டம் – ஆவடி(28-07-2017)

210

அறிவிப்பு: அப்துல் கலாம் 2ஆம் ஆண்டு நினைவைப்போற்றும் பொதுக்கூட்டம் – ஆவடி(28-07-2017) | நாம் தமிழர் கட்சி

தமிழ் அறிவியலின் பெருமைமிகு அடையாளம் நமது ஐயா அப்துல் கலாம் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவுநாளையொட்டி அவரது நினைவைப்போற்றும் விதமாக நாம் தமிழர் கட்சி நடத்தும் மாபெரும் பொதுக்கூட்டம் வருகின்ற 28-07-2017 வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் ஆவடி நகராட்சி அருகில் நடைபெறவிருக்கிறது.

அதுசமயம் நாம் தமிழர் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி, வட்டம், ஒன்றியம், கிளை உள்ளிட்ட அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் ஆன்றோர் பாசறை, இளைஞர் பாசறை, மாணவர் பாசறை, வீரத்தமிழர் முன்னணி, மகளிர் பாசறை, உழவர் பாசறை, கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை, மீனவர் பாசறை, சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பாசறை, குருதிக்கொடை பாசறை, வழக்கறிஞர் பாசறை, மருத்துவர் பாசறை உள்ளிட்ட அனைத்து பாசறைகளின் அனைத்துநிலை பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ் படித்தால் வேலைக் கிடைக்குமா? சோறு கிடைக்குமா? என்று பேசிக் கொண்டிருக்கின்ற மக்களுக்கிடையில் தமிழ் படித்தால் இந்த மண்ணையும் விண்ணையும் ஒருசேர ஆளலாம் என்று இந்த உலகிற்கு உணர்த்திய மகத்தான பெருமகனின் நினைவைப் போற்ற மறக்காமல் கூடுவோம்!

நாள்: 28-07-2017 வெள்ளிக்கிழமை மாலை 6 மணி

இடம்: ஆவடி நகராட்சி அருகில்

தொடர்புக்கு: 7299393200 / 9841644550 / 9600669122

வலைதளம்:


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி