விவசாயிகளின் போராட்டத்தை அவமதிக்கும் மத்திய அரசைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

63

16-4-2017 விவசாயிகளின் போராட்டத்தை அவமதிக்கும் மத்திய அரசைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் | நாம் தமிழர் கட்சி

விவசாயிகளின் போராட்டத்தை அவமதிக்கும் மத்திய அரசைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று 16-04-2017 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் (துறைமுகம்)  நடைபெற்றது.

இதில் நாம் தமிழர் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று
30 நாட்களுக்கும் மேலாக தொடரும் விவசாயிகளின் போராட்டத்தை அவமதிக்கும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இறுதியாக சீமான் கண்டனவுரையாற்றினார்.