13-03-2017 தமிழக மீனவர்களின் தொடர் படுகொலையைக் கண்டித்து இலங்கைத் தூதரகம் முற்றுகைப் போராட்டம்

226

13-03-2017 தமிழக மீனவர்களின் தொடர் படுகொலையைக் கண்டித்து இலங்கைத் தூதரகம் முற்றுகைப் போராட்டம் – நாம் தமிழர் கட்சி
=============================================

இராமேசுவரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த தமிழக மீனவர் பிரிட்சோ, கடந்த 06-03-2017 அன்று, கச்சத்தீவு அருகே மீன் பிடித்தபோது, இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். தமிழ் மீனவரைச் சுட்டுப்படுகொலை செய்த சிங்களப் பேரினவாத அரசைக் கண்டித்தும், தொடரும் தமிழக மீனவர் மீதான இனவெறி தாக்குதலைத் தடுக்க இலங்கையின் மீது போர்தொடுத்து கச்சத்தீவை மீட்க இந்திய அரசை வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சி சார்பாக 13-03-2017 திங்கள்கிழமை காலை 10 மணிக்கு சென்னை, நுங்கம்பாக்கத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது.

அதுசமயம் மாநில, மண்டல, மாவட்ட, வட்ட, நகர, ஒன்றிய, பகுதி, கிளை நிர்வாகிகள் மற்றும் இளைஞர், மாணவர், மகளிர், மருத்துவர், வழக்கறிஞர், உழவர், தொழிலாளர், இணையதளப் பாசறை உள்ளிட்ட அனைத்து பாசறைகளின் பொறுப்பாளர்களும் வீரத்தமிழர் முன்னணி பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

திரள்வோம்! திரள்வோம்! பகைமிரளத் திரள்வோம்! பைந்தமிழ் இனத்தீரே!


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதமிழக மீனவர்கள் மீது வன்முறை வெறியாட்டங்களைக் கட்டவிழ்த்துவிடும் இலங்கை மீது போர்த்தொடுக்க வேண்டும்! – சீமான் சீற்றம்!
அடுத்த செய்திதமிழ் மீனவர் சுட்டுக்கொலை: இராமேசுவரம் மீனவர்கள் போராட்டத்தில் பங்கேற்கிறார் சீமான்