19-02-2017 வீரத்தமிழர் முன்னணி நடத்தும் திருமுருகப் பெருவிழா – திருத்தணி

818

19-02-2017 வீரத்தமிழர் முன்னணி நடத்தும் திருமுருகப் பெருவிழா – திருத்தணி
====================================
தலைநிலக் குறிஞ்சி தந்த தலைவன்! தமிழ் இறைவன்! நமது இன மூதாதை! முருகப் பெரும்பாட்டனுக்கு நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி நடத்தும் திருமுருகப் பெருவிழா, இம்முறை ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணியில் (கமலா திரையரங்கம் அருகில்) வருகின்ற 19-02-2017 ஞாயிற்றுக்கிழமை, மாலை 3 மணிக்கு, நடைபெறவுள்ளது. இப்பெருவிழாவில் மரபுவழி கரகாட்டம், சிவதாண்டவ இசை நிகழ்ச்சி, பறை இசை, கருப்பு நிகழ்ச்சி, பல்வேறு அரிய பெரிய மேதைகளின் கருத்துரைகள் உள்ளிட்டப் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

பெருவிழாப் பேருரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

அதுசமயம் வீரத்தமிழர் முன்னணியின் அனைத்து பொறுப்பாளர்களும், நாம் தமிழர் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, வட்ட, நகர, ஒன்றிய, பகுதி, கிளை நிர்வாகிகள் மற்றும் இளைஞர், மாணவர், மகளிர், மருத்துவர், வழக்கறிஞர், உழவர், தொழிலாளர், இணையதளப் பாசறை உள்ளிட்ட அனைத்து பாசறைகளின் பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் பேரெழுச்சியாகக் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு 13-02-2017
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்தி15.02.2017 தமிழ்த்தேசியப் போராளி சுபா.முத்துக்குமார் நினைவேந்தல் பொதுக்கூட்டம் – கொத்தமங்கலம்
அடுத்த செய்திகேப்பாப்புலவு மக்களின் நிலமீட்பு உரிமைப்போராட்டம் வெல்லட்டும் : சீமான் வாழ்த்து!