05-03-2017 ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – வள்ளுவர் கோட்டம்

355

05-03-2017 ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – வள்ளுவர் கோட்டம்
———————————————————————
புதுக்கோட்டை, காரைக்காலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்தும் மத்திய அரசைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் எழுச்சிமிகு இளைஞர் பாசறை முன்னெடுக்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் எதிர்வரும் 05-03-2017 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு, சென்னை, வள்ளுவர்கோட்டத்தில் நடைபெறவுள்ளது. இப்போராட்டத்திற்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையேற்று கண்டனவுரையாற்றுகிறார்.

அதுசமயம் நாம் தமிழர் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, வட்ட, நகர, ஒன்றிய, பகுதி, கிளை நிர்வாகிகள் மற்றும் இளைஞர், மாணவர், மகளிர், மருத்துவர், வழக்கறிஞர், உழவர், தொழிலாளர், இணையதளப் பாசறை, சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பாசறை உள்ளிட்ட அனைத்து பாசறைகளின் பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும், பொதுமக்களும் உணர்வெழுச்சியோடு பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஹைட்ரோகார்பன் திட்டத்தைக் கைவிடக்கோரி தொடர் முழக்கப் போராட்டம் | 27-02-2017 நெடுவாசல் (புதுக்கோட்டை)
அடுத்த செய்திதமிழீழத் தேசப்பாடகர் சாந்தனின் மறைவு தமிழ்த்தேசிய இனத்திற்கு நிகழ்ந்த ஒப்பற்றப் பேரிழப்பு! – சீமான் புகழாரம்!