தன் உற்ற துணையை இழந்து வாடும் ஐயா நல்லகண்ணு அவர்களின் துயரத்தில் நாம் தமிழர் கட்சி பங்கேற்கிறது

8


மண்ணுக்கும் மக்களுக்குமான தூய அரசியலை மேற்கொண்டு எங்களை போன்ற தமிழ்ப் பிள்ளைகளுக்கு முன்மாதிரியாய் விளங்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஐயா நல்லக்கண்ணுவின் மனைவி ரஞ்சிதம் அம்மாள்(85) அவர்களின் மறைவு மிகுந்த மனவருத்தம் தருகிறது. ஐயா நல்லகண்ணுவின் அனைத்து மக்கள் தொண்டிற்கும் சமுதாயப் பணிகளுக்கும் துணை நின்ற அம்மாவின் துணிச்சலும் தியாகமும் என்றென்றும் போற்றத்தக்கது.
தன் உற்ற துணையை இழந்து வாடும் ஐயா நல்லகண்ணு அவர்களின் துயரத்தில் நாம் தமிழர் கட்சி பங்கேற்கிறது.
— செந்தமிழன் சீமான்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி