தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி சீமான் மலர்வணக்கம் – 11-09-2016

684

தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் 59ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி இன்று (11-09-16) காலை 11 மணிக்கு சென்னை, வளசரவாக்கத்திலுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் பெருந்தமிழர் இமானுவேல் சேகரனாரின் திருவுருவப்படத்திற்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தினார். இதில் நாம் தமிழர் கட்சியின் மூத்த பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
naam-tamilar-seeman-respects-imanuvel-sekaran1
naam-tamilar-seeman-respects-imanuvel-sekaran1
naam-tamilar-seeman-respects-imanuvel-sekaran1
naam-tamilar-seeman-respects-imanuvel-sekaran1
naam-tamilar-seeman-respects-imanuvel-sekaran1

சாதி மதங்களைப் பாரோம் – உயிர்
ஜன்மம் இத்தேசத் தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே – அன்றி
வேறு குலத்தவரா யினும் ஒன்றே!

நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

அஞ்சி யஞ்சி சாவார்-இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே
வஞ்சிப் பேய்களேன்பார்-இந்த
மரத்திலென்பார்; அந்த குளத்திலென்பார்
துஞ்சுது முகட்டி லென்பார்-மிக
துயர்படு வார்எண்ணி பயப்படுவார்

இனியொரு விதிசெய் வோம் அதை
எந்த நாளும் காப்போம்;
தனியொருவனுக்குணவிலை யெனில்
ஜகத்தினை அழித்திடு வோம்

செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே – எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே

காவிரி தென்பெண்ணை பாலாறு – தமிழ்
கண்டதோர் வையை பொருனை நதி – என
மேவி யாறு பலவோடத் – திரு
மேனி செழித்த தமிழ்நாடு
என்று பல எழுச்சிப் பாக்களால் இந்த மண்ணில் உழுது தன் புரட்சி விதைகளைத் தூவிய பெரும்பாவலன் சுப்ரமணியபாரதியினுடைய நினைவு தினம் இன்று. எல்லாவற்றையும் பாடினான். தாலாட்டை மட்டும் பாரதி பாடவில்லை. காரணம், விழித்துக் கொண்டிருப்பவர்களுக்குத்தான் உறங்க வைக்க தாலாட்டு தேவை. உறங்கிக் கொண்டிருக்கிற மக்களை எழுப்புவதற்கு எழுச்சிப்பாக்கள்தான் தேவை என்பதையுணர்ந்து தாலாட்டைப் பாடவில்லை. அந்த மகா கவிக்கு நாம் பெருமையோடு புகழ்வணக்கத்தைச் செலுத்துவோம். அவன் நினைவைப் போற்றுவோம். சாதி மத வேறுபாடற்ற சமநிலை சமூகம் படைக்க நாம் அவன் நினைவைப் போற்றுகிற இந்நாளில் உறுதியேற்போம்! நாம் தமிழர்!