செய்தியாளர் சந்திப்பில் செந்தமிழன் சீமான் பங்கேற்கிறார். 13-01-2016 | ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு

95

நாம் தமிழர் கட்சியின் செய்தியாளர் சந்திப்பில் செந்தமிழன் சீமான் பங்கேற்கிறார். 13-01-2016 | ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு

வணக்கம்.
மூத்தோர்களை போற்றுவதும், வழிபடுவதும் தமிழர்களின் மரபு. அதன்படி, ஐம்பெரும் நிலங்களில் முதன்மை நிலமாகிய குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த தமிழர்களின் மூத்தோன் முப்பாட்டன் முருகனை தமிழர்கள் காலம்காலமாக வழிபட்டு வருகிறார்கள். முருகன் பிறந்த நாளான தைப்பூச திருநாள் தமிழர் பண்பாட்டின் மிக முக்கியப் பண்டிகைகளில் ஒன்றாகும். இதனை உணர்ந்து தமிழர்கள் பரவி வாழும் மலேசிய நாட்டின் அரசு தைப்பூச திருநாளை அரசு விடுமுறை நாளாக அறிவித்திருக்கிறது. ஆனால், எட்டு கோடித்தமிழர்கள் பரவி வாழும் தமிழர்களின் தாயகமான தமிழகத்தில் தைப்பூசத் திருநாளுக்கு அரசு விடுமுறையில்லை. தெலுங்கு மக்களின் தெலுங்கு வருடப் பிறப்பையும், யுகாதியையும், மலையாள மக்களின் ஓணம் பண்டிகையையும், மார்வாடிகள் கொண்டாடுகிற மகாவீரர் ஜெயந்தியையும் அரசு விடுமுறை நாளாக அறிவித்திருக்கிற அரசு தமிழர்களின் உணர்வுக்கும், பண்பாட்டுக்கும் மதிப்பளித்து உடனடியாக தைப்பூச திருநாளை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும்.

இதனை வலியுறுத்தி நாளை (13-01-16) காலை 10 மணிக்கு சென்னை, சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் மன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் செய்தியாளர்களைச் சந்திக்கிறார். ஆகவே, அனைத்து ஊடகவியலாளர்களும் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நாம் தமிழர் கட்சி.

முந்தைய செய்திதிருவள்ளூர் கிறிஸ்ட் கலை அறிவியல் கல்லூரி விழாவில் சீமான் உரை
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சியின் உயர்மட்டக்குழு கூட்டம்