ஆந்திரப்படுகொலைக்கு சிபிஐ கோரிய நாம் தமிழர் கட்சியின் மனு-உயர்நீதிமன்றம் தள்ளுபடி

28

ஆந்திராவில் 20 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், இந்தப் படுகொலையை மத்திய புலனாய்வுத்துறை (CBI) விசாரிக்கக்கோரியும், இறந்தவர்களின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரியும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று (13-04-15) காலை விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிபதிகள் மாலா, சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை தள்ளுபடி செய்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்றம் மற்றும் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை தேவையில்லை; அதேநேரத்தில், ஆந்திர உயர்நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணையில் தன்னை மனுதாரராக சீமான் இணைத்துக்கொள்ளலாம் என்று நீதிபதிகள் கூறினர்.

முந்தைய செய்திசத்தியமங்கலத்தில் நாம் தமிழர் கட்சியின் கொடியேற்று விழா நடந்தது
அடுத்த செய்தி20 தமிழர் படுகொலை எதிர்ப்பு தெரிவித்து பேராசிரியர் அருண்குமார், பணி விலகல்