நாம் தமிழர் கட்சி – மாணவர் பாசறையின் அடுத்தக்கட்ட செயல்திட்டங்கள் மற்றும் நகர்வுகள்:

25
நாம் தமிழர் கட்சி-மாணவர் பாசறையின் அடுத்தக்கட்ட செயல்திட்டங்கள் மற்றும் நகர்வுகள்:

1) மாவட்ட வாரியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாணவர் பாசறையின் கலந்தாய்வுக்கூட்டம் நடத்துதல்.

2) ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அனைத்து பள்ளி,கல்லூரிகளிலும் மாணவர் பாசறையின் கிளையை தொடங்கி, அந்த கல்லூரியில் 5 பேர் கொண்ட மாணவர் பாசறையின் தலைமைக்குழுவை நியமித்தல்.

3) மாணவர் பாசறையின் உறுப்பினர் சேர்க்கையை அனைத்து மாவட்டங்களிலும் விரைவாக தொடங்கி, உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்குதல்.

4) மாணவர் பாசறையின் மண்டல பொறுப்பாளரை நியமித்து, அவரின்கீழ் மாவட்ட,வட்ட ,பகுதி,தொகுதி பொறுப்பாளர்களை நியமித்து, அனைத்து மாவட்டத்திலுள்ள கல்லூரிகளிலும் உறுப்பினர் சேர்க்கைப்பணியை முடுக்கி விடுதல்.

5) மாணவர்கள் அரசியலுக்கு வரவேண்டியதன் அவசியம் குறித்தும், நாம் தமிழர் கட்சியின் தேவை குறித்தும் துண்டறிக்கைகளை அண்ணன் சீமானின் ஒப்புதலோடு மாநிலம் முழுவதுமுள்ள பள்ளி, கல்லூரிகளில் அந்தந்த மாவட்ட மாணவர் பாசறை பொறுப்பாளரின் வாயிலாக கொண்டு சேர்த்தல்.

6) கடந்த 22-06-13 அன்று நடந்த மாநில மாணவர் பாசறை கலந்தாய்வுக் கூட்டத்தின் தீர்மானத்தின்படி, ‘தாய்மொழிக்கல்வி’ எனும் தலைப்பில் நடைபெறவிருந்த மாநிலம் தழுவிய கருத்தரங்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அதற்கான பணிகளை மீண்டும் துவங்கி கருத்தரங்கினை விரைவாக நடத்துதல்.

7) மாநிலம் தழுவிய அளவில் பேச்சுப்போட்டி, பாட்டுப்போட்டி,கட்டுரைப்போட்டி நடத்த வேண்டும் என்ற தீர்மானத்தின்படி, முதற்கட்டமாக மாணவர் பாசறை இணையதளம் ‘தீ’ வழியாக கட்டுரைப்போட்டிகளை நடத்துதல்.

மேற்குறிப்பிட்ட செயல்திட்டங்களை மாணவர் பாசறையின் குறியீடாக இருக்கிற ‘ஈகைத்த்தமிழன்’ அப்துல் ரவூப் நினைவெழுச்சி நாளான திசம்பர் 15க்குள் முடிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதற்கு கட்சியின் அனைத்து மட்டத்திலுள்ள பொறுப்பாளர்களும் ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.