முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – ஹிந்துஸ்தான் கல்லூரி மாணவர் அமுதன் படுகொலை, கர்நாடக வனத்துறையால் 3 தமிழர்கள் சுட்டுப்படுகொலை ஆகியவற்றைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி – ஒருங்கிணைந்த கோவை மாவட்டம் நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

3

க.எண்: 2026080242
நாள்: 17.08.2026

கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி, கோவை ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதனின் படுகொலையைக் கண்டித்தும், கோவையில் அதிகரித்து வரும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளைத் தடுக்கத் தவறிய தவெக அரசைக் கண்டித்தும், கர்நாடக வனத்துறையால் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், ஒருங்கிணைந்த கோவை மாவட்டம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வருகின்ற ஆவணி 02ஆம் நாள் (19-08-2026) புதன்கிழமை மாலை 04 மணியளவில் கோவை – சுந்தராபுரம், சங்கம் தெருவில் நடைபெறவிருக்கிறது.
ஹிந்துஸ்தான் கல்லூரி மாணவர் அமுதன் படுகொலை, கர்நாடக வனத்துறையால் 3 தமிழர்கள் சுட்டுப்படுகொலை ஆகியவற்றைக் கண்டித்து
நாம் தமிழர் கட்சி – ஒருங்கிணைந்த கோவை மாவட்டம் நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
கண்டனவுரை:
இடும்பாவனம் கார்த்திக், மாநில ஒருங்கிணைப்பாளர், இளைஞர் பாசறை நாள்: ஆவணி 02 புதன்கிழமை | 19-08-2026 மாலை 04 மணிக்கு இடம்: கோவை – சுந்தராபுரம் (சங்கம் தெரு)
இம்மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், கோவை மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
-தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழா கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – வருசநாடு பகுதி பாதிக்கப்பட்ட மக்களுடன் நாம் தமிழர் கட்சி இணைந்து நடத்தும் மலை கிராம மக்களின் உரிமைக்கான மாபெரும் கவன ஈர்ப்புப் பொதுக்கூட்டம்