தலைமை அறிவிப்பு – 2026 வேட்பாளர்கள் ஒன்றுகூடல்

27

க.எண்: 2026020085
நாள்: 18.02.2026

தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், திருச்சியில் வருகின்ற 21.02.2026 அன்று மாலை 04 மணியளவில் நடைபெறவிருக்கும் ‘மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாட்டில்’ ஒரே மேடையில் அறிமுகப்படுத்தவிருக்கும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அனைவரும், மாநாட்டுக்கு முன்பாக பிற்பகல் 02 மணியளவில் திருச்சி – திண்டுக்கல் சாலையில் அமைந்துள்ள எல்.கே.எஸ். மகால் (LKS Mahal) அரங்கில் ஒன்றுகூட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள். அனைவரும் ஒருங்கிணைக்கப்பட்டு, உரிய வழிகாட்டு நெறிமுறைகளுடன் அங்கிருந்து மாநாட்டு திடலுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
எனவே, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் அனைவரும் தவறாமல் எல்.கே.எஸ். மகால் (LKS Mahal) அரங்கில் ஒன்றுகூடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். வேட்பாளர்களுக்கென தலைமை அலுவலகத்தில் இருந்து நிர்வகிக்கப்படும் பகிரி குழுவில் இதுகுறித்த மேலும் தகவல்கள் வழங்கப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – மாற்றத்திற்கான மக்களின் மாநாட்டில் அனுமதிக்கப்பட்ட வழி பாதை
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை