க.எண்: 2025100908
நாள்: 08.10.2025
அறிவிப்பு:
எழுதிரள் வழங்கும் தமிழ்த்தேசியப் படைப்பாளர் விருதுகள் 2025 வழங்கும் விழா வருகின்ற புரட்டாசி 25ஆம் நாள் 11-10-2025 மாலை 05 மணியளவில் சென்னை போரூர் மேம்பாலம் அருகில் உள்ள ஸ்ரீ ஈஸ்வரி திருமண அரங்கில் நடைபெறவிருக்கிறது.
எழுதிரள் வழங்கும்
தமிழ்த்தேசியப் படைப்பாளர் விருதுகள் 2025 விருதுகள் வழங்கி, விழாப் பேருரை: நாள்: புரட்டாசி 25 | 11-10-2025 மாலை 05 மணியளவில் இடம்: ஸ்ரீ ஈஸ்வரி திருமண அரங்கம்
|
இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, விருதுகள் வழங்கி, விழாப் பேருரையாற்றவிருக்கிறார்.
இம்மாபெரும் விழாவில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி