முகப்பு தலைமைச் செய்திகள்

மாதவரம் தொகுதி இளைஞர் பாசறைச் செயலாளர் மாதவன் மறைவு – தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் துயர் பகிர்வுச் செய்தி

167

துயர் பகிர்வு:

நாம் தமிழர் கட்சி – மாதவரம் தொகுதியின் இளைஞர் பாசறைச் செயலாளர் தம்பி மாதவன் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்.

மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் போராடிவரும் மாபெரும் புரட்சிகர இயக்கமான நாம் தமிழர் கட்சி எனும் அரசியல் பெரும்படையில் தன்னையும் இணைத்துக்கொண்டு, களப்பணியாற்றிவந்த தம்பி மாதவன் அவர்கள் மறைந்திருப்பது மிகுந்த மனத்துயரத்தைத் தருகிறது.

ஈடுசெய்யவியலா பேரிழப்பினால் வாடும் தம்பியின் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

தம்பி மாதவன் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதம்பி க.பிரபாகரன் அவர்களை இழந்து வாடும் பெற்றோர்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும்,…
அடுத்த செய்திபுதுக்கோட்டை வடக்கு நகரத் துணைத்தலைர் க.பிரபாகரன் மறைவு! – தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் துயர் பகிர்வுச் செய்தி