முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – மேகதாதுவில் அணை கட்ட முயலும் கர்நாடக அரசின் செயலை எதிர்ப்பதாகக் கூறி, நடுவர் மன்றம் அமைக்கக் கோரும் ஆளும் தவெக அரசின் மிகத் தவறான முடிவைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

3

க.எண்: 2026070222
நாள்: 14.07.2026

அறிவிப்பு:

மேகதாதுவில் அணை கட்ட முயலும் கர்நாடக அரசின் செயலை எதிர்ப்பதாகக் கூறி, நடுவர் மன்றம் அமைக்கக் கோரும் ஆளும் தவெக அரசின் மிகத் தவறான முடிவைக் கண்டித்து. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், ஒருங்கிணைந்த திருவாரூர் மாவட்டம் நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஆடி 02ஆம் நாள் (18-07-2026) சனிக்கிழமை மாலை 04 மணியளவில் திருவாரூரில் நடைபெறவிருக்கிறது.
மேகதாது அணை சிக்கலுக்குப் புதிய நடுவர் மன்றம் கோரும் தமிழ்நாட்டு அரசைக் கண்டித்து
நாம் தமிழர் கட்சி – ஒருங்கிணைந்த திருவாரூர் மாவட்டம் நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
முன்னிலை:
மருத்துவர் இலரா.பாரதிச்செல்வன், மாநிலப் பொருளாளர் கண்டனவுரை:
கல்வியாளர் மு.இ.ஹீமாயூன் கபீர், மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் மணி செந்தில், மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக், மாநில ஒருங்கிணைப்பாளர், இளைஞர் பாசறை
நாள்: ஆடி 02 சனிக்கிழமை | 18-07-2026 மாலை 04 மணிக்கு இடம்: திருவாரூர் (தைலம்மை திரையரங்கம் எதிரில்)
இம்மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், திருவாரூர் மற்றும் அருகிலுள்ள
மாவட்டங்களைச் சேர்ந்த நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப்
பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
-தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில்,கதிரியக்கத் திட்டத்திற்குத் துணைபோகும் வகையில் த.வெ.க. அரசு IREL நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட கால நீட்டிப்பு அரசாணையை திரும்பப்பெற வலியுறுத்திமாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.
அடுத்த செய்திமதுக்கடைகளை மூடக்கோரிப் போராடிய மாணவிகள் மீது காவல்துறையை ஏவி கண்மூடித்தனமாக தவெக அரசு தாக்குதல் நடத்துவது கொடுங்கோன்மை!