தலைமை அறிவிப்பு – தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், கரூர் அரவக்குறிச்சி மண்டலத்தைச் சேர்ந்த கட்சி மற்றும் பாசறைகளின் மாநில, மண்டல, மாவட்டப் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம்

8

க.எண்: 2025090776அ

நாள்: 17.09.2025

அறிவிப்பு:
கரூர் அரவக்குறிச்சி மண்டலக் கலந்தாய்வு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், கரூர் அரவக்குறிச்சி மண்டலத்தைச் சேர்ந்த கட்சி மற்றும் பாசறைகளின் மாநில, மண்டல, மாவட்டப் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம், தமிழ் மீட்சிப் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.பன்னீர் செல்வம் அவர்களின் முன்னிலையில் வருகின்ற புரட்டாசி 12ஆம் நாள் 28-09-2025 அன்று காலை 10 மணி முதல் வேலாயுதம்பாளையம், நொய்யல் சாலை, ஜெயராஜ் அலுவலகத்தில் நடைபெறவிருக்கிறது.

 

இந்நிகழ்வில் கரூர் அரவக்குறிச்சி மண்டலத்திற்குட்பட்ட கட்சியின் மாநில, மண்டல, மாவட்டப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – ஒருங்கிணைந்த கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்கள் நடத்தும் மலை வளமே, மண் வளம்! மலைகளின் மாநாடு உணர்வின் உரை: செந்தமிழன் சீமான்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – திருநெல்வேலி நாங்குனேரி மண்டலம் (நாங்குனேரி சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்