தமிழ்த் துறைகளில் உயர் கல்வி கற்று உயர்ந்திட தமிழ் மீட்சிப் பாசறையின் வழிகாட்டல்

710

தமிழ்த் துறைகளில் உயர் கல்வி கற்று உயர்ந்திட தமிழ் மீட்சிப் பாசறையின் வழிகாட்டல் | நாம் தமிழர் கட்சி

தமிழ் படிக்கலாமா?
தமிழில் என்ன படிக்கலாம்?
தமிழ் படித்தால் வேலை கிடைக்குமா?

கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அரசின் அறிவிப்புப்படி மேற்படிப்பிற்கு இணையவழி விண்ணப்பிக்கக் கடைசி நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தமிழ்த் துறைகளில் கற்க விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளதாகத் தெரிகிறது.

தமிழ்த் துறைகளில் கற்க என்னென்ன படிப்புகள் உள்ளன? அவற்றிற்கான வேலை மற்றும் வணிக வாய்ப்புகள் என்ன? என்பது போன்ற செய்திகளில் பெரும்பாலானோருக்குத் தேவையான தெளிவு இருப்பதாகத் தெரியவில்லை.

அரசியல் கடந்து, இது போன்ற செய்திகளில் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்துவது நம் கடமை. நம் மொழியை நாம் கற்கவில்லையெனில் யார் கற்பார்? நம் தமிழ் நமக்கான வாய்ப்புகளைத் திறந்துவிடும் மொழி.

இதன்பொருட்டு நாம் தமிழர் கட்சியின் மொழிப் படைப்பிரிவான தமிழ் மீட்சிப் பாசறை சார்பாக இந்த இணையவழி விழிப்புணர்வுப் பரப்புரையில் ஈடுபடுகிறோம்.

உறவுகள் இந்தச் செய்தியை உங்கள் தொகுதி, பகுதி, அருகில் உள்ள மாணவர்களிடம் கொண்டு சேர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ் மீட்சியே! தமிழர் எழுச்சி!

– தமிழ் மீட்சிப் பாசறை
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திகபசுர குடிநீர் வழங்கல் – ஆயிரம் விளக்கு தொகுதி
அடுத்த செய்திபொறுப்பாளர்கள் அறிமுகக்கூட்டம் – திருவாடானை தொகுதி