க.எண்: 2025070661
நாள்: 13.07.2025
அறிவிப்பு:
வரதட்சணை கொடுமை தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட
ஒருங்கிணைந்த நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் மாநில மகளிர் பாசறை சார்பாக வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட தங்கை ரிதன்யா மரணத்திற்கு நீதி வேண்டியும், குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனையை உறுதிபடுத்தக்கோரியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்நாள்: ஆடி 01 | 17-07-2025 மாலை 04 மணி இடம்: |
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிப்புதூரை சேர்ந்த 27 வயதான புதுமணப்பெண் தங்கை ரிதன்யா அவர்களின் மரணத்திற்கு நீதி வேண்டியும், தங்கை ரிதன்யாவின் தற்கொலைக்கு காரணமான குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை உறுதிபடுத்தக்கோரியும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், ஒருங்கிணைந்த நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் மாநில மகளிர் பாசறை சார்பாக அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகில் 17-07-2025 அன்று மாலை 04 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.
இம்மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி