க.எண்: 2025060638
நாள்: 27.06.2025
அறிவிப்பு:
சிவகங்கை காரைக்குடி மண்டலத்தைச் சேர்ந்த மாநில, மண்டல, மாவட்டப் பொறுப்பாளர்களுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் நாள்: 28-06-2025 மாலை 06 மணி முதல்இடம்: ஸ்ரீ தேவேந்திரர் மகால் காரைக்குடி |
சிவகங்கை காரைக்குடி மண்டலத்தைச் சேர்ந்த கட்சி மற்றும் பாசறைகளின் மாநில, மண்டல, மாவட்டப் பொறுப்பாளர்களை, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் 28-06-2025 அன்று மாலை 06 மணி முதல் காரைக்குடி, ஸ்ரீ தேவேந்திரர் மகால் அரங்கில் சந்தித்து கலந்துரையாடவிருக்கிறார்.
இந்நிகழ்வில் காரைக்குடி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி