தலைமை அறிவிப்பு – தமிழ்த்தேசியப் பொதுவுடைமைப் போராளி புலவர் கலியபெருமாள் மற்றும் சமூகநீதி மாவீரர் ஆனைமுத்து ஆகியோரின் நினைவைப் போற்றும் நூற்றாண்டுப் பெருவிழா

19

க.எண்: 2025060572

நாள்: 07.06.2025

அறிவிப்பு:

தமிழ்ப்பேரினத்தின் உயர்வுக்காக, தமது வாழ்வையே ஒப்படைத்த தமிழ்த்தேசியப் பொதுவுடைமைப் போராளி புலவர் கலியபெருமாள் மற்றும் சமூகநீதி மாவீரர் ஆனைமுத்து ஆகியோரின் நினைவைப் போற்றும் நூற்றாண்டுப் பெருவிழா எதிர்வரும் ஆடவைத் திங்கள் (ஆனி) 22 ஆம் நாள் (06.07.2025) மாலை 04 மணியளவில் வடலூரில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் பேரெழுச்சியோடு நடைபெறவுள்ளது.

ஒப்பற்ற தமிழ்ப் பெரியோர்களின் நூற்றாண்டுப் பெருவிழாவில் தமிழர்கள்  பெருந்திரளாகக் கூடும் வண்ணம் இந்நிகழ்வைச் சிறப்பாக முன்னெடுப்பது தொடர்பாக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், மாநில மேலிடப் பார்வையாளர்கள் முன்னிலையில் வடலூரில் (பண்ருட்டி சாலையில்) அமைந்துள்ள இராதா திருமண மண்டபத்தில் விடைத் திங்கள்(வைகாசி) 27 ஆம் நாள் (10.06.2025) செவ்வாய் அன்று மாலை சரியாக 5 மணிக்கு கலந்தாய்வுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.

இக்கலந்தாய்வுக்கூட்டத்தில், கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் அருகமை மாவட்டங்களைச் சேர்ந்த கட்சி மற்றும் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் தவறாது கலந்துகொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

 

 

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – திருவண்ணாமலை செங்கம் மண்டலம் (செங்கம் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – சேலம் மாவட்டத்தில் புதிய கட்டமைப்பு நிறைவுறாத சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த பொறுப்பாளர்களுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல்