ஐயா வைகுண்டர் மக்கள் கட்சித் தலைவர் முத்து ரமேஷ் – சீமான் சந்திப்பு!

13

15-06-2025 அன்று தூத்துக்குடி மாவட்டம், பெரியதாழையில் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்ற பனையேறி கள் இறக்கும் அறப்போராட்டத்திற்கு ஆதரவாக என்னுடன் துணைநின்ற காரணத்திற்காக தமிழ்நாடு நாடார் சங்கம் மற்றும் ஐயா வைகுண்டர் மக்கள் கட்சித் தலைவர் அன்பு இளவல் முத்து ரமேஷ் அவர்களது சென்னை வண்டலூர் இல்லத்திற்கு சமூக விரோதிகள் சிலர் சென்று குடும்பத்தினரை மிரட்டி அச்சுறுத்தியுள்ளனர். இதனையொட்டி, இன்று 19-06-2025 தம்பி முத்து ரமேஷ் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று, சமூக விரோதிகள் மீதான வழக்கு விசாரணை குறித்த விவரங்களைக் கேட்டறிந்து, தம்பியின் குடும்பத்தினருடனும், தமிழ்நாடு நாடார் சங்கம் மற்றும் ஐயா வைகுண்டர் மக்கள் கட்சி நிர்வாகிகளுடனும் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் கலந்துரையாடினார்.

முந்தைய செய்திபெருந்தமிழர் ஐயா கக்கன் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்! – சீமான்
அடுத்த செய்திகூட்டரசுக் கோட்பாடு மாநாடு! – சீமான் பங்கேற்பு!