உலகத் தமிழ் கிறித்தவர் இயக்கம் சார்பில் 22-05-2025 அன்று, சென்னை இராஜாஜி சாலையில் அமைந்துள்ள கப்பல் சிப்பந்திகள் நல மைய வளாகத்தில் (Seafarers’ Welfare Club) வழக்காடுவோம் வாருங்கள்! என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பல்வேறு திருச்சபை ஆயர்கள், போதகர்கள், அருள்பணியாளர்கள் மற்றும் அருட்சகோதர-சகோதரிகளின் கேள்விகளுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பதிலளித்தார்.