உலக செவிலியர் நாள் நல்வாழ்த்துகள்! – சீமான்

15

“உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று அப்பால்நாற் கூற்றே மருந்து” என்ற தமிழ்மறை கூறும் முதுமொழிக்கேற்ப நோயுற்றவருக்கும், நோய் தீர்க்கும் மருத்துவருக்கும் இடையில் பாலமாக விளங்கி, தாயினும் இனிய தன்மையோடு பரிவுடன் பணிவிடைகள் பலசெய்து மருந்துகளைக் காலம் தவறாமல் வழங்குவதோடு, கனிவுமிக்கச் சொற்களால் தானே நோய் தீர்க்கும் அருமருந்தாகவும் திகழ்கின்ற செவிலித்தாய்களை உலகச் செவிலியர் நாளில் நன்றியுடன் நினைவுகூர்வோம்!

கொரோனா பேரிடர் சூழலில் தன்னுயிரைப் பொருட்படுத்தாது மக்கள் உயிர்களைக் காக்க போர்வீரர்கள் போல நாளும் செயல்பட்ட, ஈகைப்பேரொளிகளான செவிலியத்தாய்களின் நீண்டகால நியாயமான கோரிக்கைகளான பணி நிரந்தரம், ஒன்றிய அரசு செவிலியர்களுக்கு இணையான ஊதிய உயர்வு, காலி இடங்களை நிரப்பி பணிச்சுமையைக் குறைப்பது உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றி, இச்செவிலியர் நாளிலாவது அவர்கள் படும் நெடுந்துயர் தீர்க்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

தன்னலம் கருதா இணையற்ற மருத்துவச் சேவையால் உயிர்களைக் காக்கும் உன்னதப் பணி மேற்கொள்ளும் அன்புடை செவிலியர்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கிறேன்!

https://x.com/Seeman4TN/status/1921867032854745574

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – திருவாரூர் மண்டலம் (திருவாரூர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திஅன்னையர் நாள் நல் வாழ்த்துகள்! – சீமான்