க.எண்: 2025040301அ
நாள்: 06.04.2025
அறிவிப்பு:
வக்ஃபு வாரியச் சட்டத்திருத்த முன்வரைவினை உடனடியாகத் திரும்பப்பெற வலியுறுத்தி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நாள்: பங்குனி 30 | 13-04-2025 காலை 10 மணி முதல் தலைமை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர்இடம்: சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் சென்னை |
இஸ்லாமியப் பெருமக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி வலுக்கட்டாயமாக இந்திய ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள வக்ஃபு வாரியச் சட்டத்திருத்த முன்வரைவினை
உடனடியாகத் திரும்பப்பெற வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சி சார்பாக வருகின்ற
13-04-2025 அன்று காலை 10 மணியளவில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்குமாறு தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார். ஒருங்கிணைந்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் சார்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.
இந்நிகழ்வில் மேற்குறிப்பிட்டுள்ள தொகுதிகளைச் சேர்ந்த கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி