வேல் வேல் வீரவேல்! வேல் வேல் வெற்றிவேல்!
தலைநிலக் குறிஞ்சி தந்த தலைவன், தமிழ் இறைவன், எங்கள் முப்பாட்டன் திருமுருகப்பெருமானின் திருப்புகழ் போற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு வருகின்ற தை மாதம் 29ஆம் தேதி (11-02-2025) அன்று தமிழ்நாடு மட்டுமல்லாது உலகம் முழுதும் பரவி வாழ்கிற தமிழர்கள் தமிழ் இறையோன் திருமுருகப்பெருமானை வணங்கி, அவரது திருப்புகழைப் போற்றிக் கொண்டாடவிருக்கிறார்கள்.
நாம் தமிழர் கட்சியின் தமிழர் மெய்யியல் மீட்சிக்கானப் படைப்பிரிவான வீரத்தமிழர் முன்னணி சார்பில் வழமைபோல இவ்வாண்டும் தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் நாம் தமிழர் உறவுகள் தாங்கள் வசிக்கும் பகுதியில் வேல்வழிபாட்டு நெறிமுறைகளின் படி, குடில் அமைத்து முருகப்பெருமானின் வடிவான வேலினை நிறுவி அடியார்களையும் பொதுமக்களையும் ஒன்றுதிரட்டி வழிபாடு நடத்தி, தேன்-தினைமாவு உருண்டை, சிற்றுண்டி மற்றும் இனிப்புகள் வழங்குமாறு நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களையும், வீரத்தமிழர் முன்னணி மற்றும் அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழர் இறை முருகப்பெருமானைப் போற்றுவோம்!
நாம் தமிழர் என்று உலகிற்குக் காட்டுவோம்!
பண்பாட்டுப் புரட்சி இல்லாது; அரசியல் புரட்சி வெல்லாது!
புரட்சி வாழ்த்துகளோடு,
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி