தமிழினத்தின் உயர்வுக்காகவும், தமிழர்களின் நலவாழ்வுக்காகவும் தனது வாழ்வையே முழுவதுமாக ஒப்படைத்துக்கொண்டு, அதற்காகவே அரும்பாடாற்றி உழைக்கும் பெருந்தகை!
தமிழ்த்தேசிய இனத்தின் உரிமை மீட்புப்போராட்டங்களிலும், தமிழர் நலன் சார்ந்த சிக்கல்களிலும் எப்போதும் முதன்மையாகக் களத்தில் நிற்கும் களப்போராளி!
தனது கூர்மையான மதிநுட்பத்தாலும், அளப்பெரிய தர்க்க அறிவாலும் தமிழ்த்தேசியம் எனும் ஒப்பற்ற கருத்தியலை அறிவுத்தளத்திலும், மக்கள் மனத்திலும் நிலைநிறுத்தும் பேரறிவாளர்!
நாங்கள் முன்வைக்கும் தமிழ்த்தேசிய அரசியலில் எங்களுக்கு முன்னத்திஏராக விளங்குகிற பெருமகன் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் பெருமதிப்பிற்குரிய எங்கள் ஐயா கி.வெங்கட்ராமன் அவர்களுக்கு அன்பு நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
https://x.com/Seeman4TN/status/1846576894998925685
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி