தமிழ்ப்பேரினத்தின் வீரமிகு பெரும்பாட்டனார், மாமன்னர் பூலித்தேவன் நினைவைப்போற்றுகின்ற திருநாள் இன்று!
ஆங்கிலேயர் ஆதிக்கத்தின் கீழ் அன்னைத்தமிழ் நிலம் அடிமைப்பட்டுகிடந்த பொழுது அதன் விடுதலைக்குக் கிளர்ந்தெழுந்த வீரர்களில் முதன்மையான பெருமகனார் நம்முடைய தாத்தா பூலித்தேவன் அவர்கள்.
‘நெற்கட்டான் செவ்வயலில் யாரோ பூலித்தேவனாமே’ என ஏளனமாக எண்ணி படையைத்திரட்டி வந்த ஆங்கிலேயர்களை, வெறும் வாளும், வேலும் கொண்ட வீரத்தமிழ் மறவர் படைநடத்தி, களத்தில் நேருக்கு நேர் எதிர்கொண்டு போரிட்டு வென்ற மாவீரன்! எந்த இடத்திலிருந்து ஆங்கிலேயர் படைதிரட்டி வந்தனரோ அதுவரை திருப்பி அடித்து விரட்டிய வீரத்திருமகன் பூலித்தேவன் அவர்கள்!
அவர் போரிட்டுக் காட்டிய பிறகுதான் பல மன்னர்கள் தாங்களும் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட முடியும் என்ற பெருநம்பிக்கை கொண்டனர்.
பீரங்கி குண்டுகளால் கூடத் துளைக்க முடியாத கோட்டையைக் கட்டி ஆண்ட பேரரசன் பூலித்தேவன் அவர்களின் வீரத்தைப் போற்றுவதில் வழிவழியே வருகின்ற மானத்தமிழ்ப் பிள்ளைகள் பெருமிதமடைகிறோம்!
வீரப்பெரும்பாட்டன் மாமன்னர் பூலித்தேவன் அவர்களுக்கு வீரவணக்கம்!
இன்று 01-09-2024 மாலை 05 மணியளவில் தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டத்தில் அமைந்துள்ள நெற்கட்டான் செவ்வயலில் அமைந்துள்ள பாட்டனாரின் நினைவிடத்தில், நாம் தமிழர் கட்சி சார்பாக மலர்வணக்கம் செலுத்த மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி