ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து தாயக விடுதலைக்காக ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் பங்கேற்று, சிறைசென்ற விடுதலைப்போராட்ட வீரர்!
நாட்டின் எல்லையில் நின்று மண்ணையும், மக்களையும் பாதுகாத்த இராணுவ வீரர்!
ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்காக இயக்கம் கண்ட பெருந்தகை!
சாதிய தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக மாநாடுகள் நடத்திய புரட்சியாளர்!
சமூகநீதிப் போராளி!
நமது ஐயா இமானுவேல் சேகரனார் அவர்களின் நினைவைப் போற்றும் இந்நாளில், வழிவழி வருகின்ற மானத்தமிழ்ப் பிள்ளைகள் நாம் தமிழர் என்ற ஓர்மையுடன் ஒன்றுபட்டு, சாதிய ஏற்றத்தாழ்வற்ற சமத்துவச் சமூகம் படைப்போம் என உறுதியேற்போம்!
பெருந்தமிழர் நமது ஐயா இமானுவேல் சேகரனார் அவர்களுக்குப் பெருமிதத்தோடு நம் புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்!
நாம் தமிழர்!
https://x.com/Seeman4TN/status/1833723827890614650
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
சமூகநீதிப் போராளி பெருந்தமிழர் நமது ஐயா இம்மானுவேல் சேகரன் அவர்களின் 67ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, 11-09-2024 அன்று பிற்பகல் 01 மணியளவில் இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அமைந்துள்ள ஐயாவின் நினைவிடத்தில் நடைபெற்ற நினைவுநாள் நிகழ்வில், நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று மலர்வணக்கம் செலுத்தினார்.