பலநூற்றாண்டுகளாகப் பெருந்தொய்வுற்றிருந்த
தமிழ் இலக்கியத்திற்குப் புது இரத்தம் பாய்ச்சி கவிப்புரட்சிக்கு வித்திட்ட பெருங்கவிஞன்!
இலக்கணம் அறிந்தால்தான் இலக்கியம் புரியும்
என்ற இலக்கணத்தை மாற்றி,
எளிய தமிழ் பாட்டெழுதி,
பாமரனும் பண்ணிசைத்து பாடச்செய்த பாவலன்!
தான் அறிந்த மொழிகளில் தமிழ்போல்
இனிதாவது எங்கும் காணோம் என்று
தரணி எங்கும் பரணி பாடிய பெருமகன்!
செந்தமிழ் நாட்டினைப் பைந்தமிழ் பாட்டினில்
வைத்துப் போற்றிய பெரும்பாட்டன்!
தெள்ளு தமிழில் தேச விடுதலைக்கு
பள்ளு பாடிய தென்தமிழ் நாட்டான்!
கஞ்சிக்கில்லாது அதன் காரணம் அறியாது
துஞ்சி மடிவோரைக் கண்டு நெஞ்சு பொறுக்காது வெஞ்சினம் கொண்டு வெகுண்ட தமிழ்க்கவி!
மண் விடுதலை பாடிய வாயால்
பெண் விடுதலையும் பாடிய பெருந்தகை!
சாதிகள் இல்லையடி பாப்பா என்று
சமூகநீதி குரலெடுத்துப் பாடிய குயில்!
தேமதுர தமிழோசை உலகெலாம் பரவிட
இறவாத புதுக்கவிதை நூல்கள் இயற்றி
தெருவெலாம் தமிழ் முழக்கம் செய்த
பைந்தமிழ்ப் பாவலன்!
பெரும்பாவலர் நமது பாட்டன் பாரதியாரின் நினைவைப் போற்றுவோம்!
நாம் தமிழர்!
https://x.com/Seeman4TN/status/1833722933333852161
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
பெரும்பாவலர் நமது பாட்டன் பாரதியார் அவர்களுடைய நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை ரயில் நிலையம் அருகே உள்ள அவர் பணியாற்றிய சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் 11-09-2024 அன்று மாலை அணிவித்து மலர்வணக்கம் மற்றும் புகழ்வணக்கம் செலுத்தினார்.