ஈழத்தாயக விடுதலைப் போராட்டக்களத்தில் 12 நாட்கள் பட்டினி கிடந்து அறவழியில் போராடி உயிரைக்கொடுத்து உலகத்தாரின் மனசாட்சியை உலுக்கியவன்!
உறங்கிக்கிடந்த விடுதலைப் போராட்டத்தின் ஆன்மாவைத் தன் உயிரைத் தந்து தட்டியெழுப்பிய புரட்சியாளன்!
தன்னுயிரைவிடத் தான் பிறந்த பெருமைமிக்க இனத்தின் உரிமையே மேலானது என்று உணர்த்தியவன்!
அண்ணன் திலீபன் அவர்களின் நினைவுநாள் இன்று (26-09-2024)
எந்த உயரிய நோக்கத்திற்காக, எந்தப் புனிதக் கனவிற்காகத் தன்னுயிரைத் தந்தாரோ அந்தக் கனவை நனவாக்குவோம் என்கிற உறுதியை நாம் ஏற்போம்!
ஈகைப் பேரொளி அண்ணன் திலீபனுக்கு நம் புரட்சிகரமான வீரவணக்கத்தினைப் பெருமிதத்தோடு செலுத்துவோம்!
நாம் தமிழர்!
https://x.com/Seeman4TN/status/1839151819982881222
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி