இந்திய ஒன்றிய அரசு எதேச்சதிகாரமாக நடைமுறைப்படுத்தியுள்ள புதிய குற்றவியல் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லி ஜந்தர்மந்தரில் 29-07-2024 அன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த வழக்கறிஞர் பெருமக்கள் முன்னெடுக்கும் கண்டன அறப்போராட்டம் வெற்றிபெற என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பாஜக அரசின் பாசிசப்போக்கைக் கண்டித்து நடைபெறும் இக்கண்டன அறப்போராட்டத்திற்குத் தோள்கொடுத்து துணைநிற்பதற்காக, நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை மாநிலச்செயலாளர் சங்கர் அவர்களின் தலைமையில் டெல்லி சென்றுள்ள உறவுகளுக்கு என்னுடைய அன்பும், புரட்சிகர வாழ்த்துகளும்!
https://x.com/Seeman4TN/status/1817447723005628601
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி