ஆசிரியர் தின நலவாழ்த்துகள்! – செந்தமிழன் சீமான்

131

ஒரு சிறிய நாட்டின் இளவரசன் அலெக்சாண்டரை உலகம் வெல்லும் பேரரசனாக, மாவீரனாக மாற்றி காட்டிய அரிஸ்டாட்டில் போல, எளிய குடும்பத்தில் பிறந்த பீமாராவை உலகமே வியக்கும் பேரறிஞராக மாற்றி, தன் பெயரையே தன் மாணவனுக்கு அளித்த அவரது ஆசிரியர் அம்பேத்கரைப்போல, உலகத்தின் மகத்தான மனிதர்களை உருவாக்கும் உலைக்களங்களாக ஆசிரியர்கள் திகழ்கிறார்கள்.

ஒரு தாய் தன் பிள்ளையைப் பத்து மாதங்கள்தான் கருவறையில் சுமக்கிறாள். ஆசிரியப்பெருமக்கள் அறிவுக்கருவறையில் பல ஆண்டுகள் சுமக்கிறார்கள். தாய் தன் குழந்தைக்கு இந்த உலகைக் காட்டுகிறார். ஆசிரியப்பெருமக்கள்தான் அந்தக் குழந்தையை இந்த உலகிற்கே காண்பிக்கிறார்கள்.
அறிவின் விழிகொண்டு அனைத்தையும் தரிசிக்க கற்றுக்கொடுத்த நல் ஆசிரியர்கள் தான் உலகம் இயங்குவதற்கான அச்சாணிகளாக அமைகிறார்கள்.

எங்கோ வான் பார்த்துக் கிடக்கும் வறண்ட பூமியில் , எளிய கிராமத்தில் பிறந்த என்னையெல்லாம் உருவாக்கித் தந்த என்னுடைய ஆசிரியப் பெருமக்கள் அனைவரையும் நன்றியோடும், மதிப்போடும் என் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் நான் நினைத்து நெகிழ்கிறேன்.

நம் தேசத்தின் வருங்காலமான இளைய சமூகத்தை உருவாக்கித் தரும் ஆசிரியப் பெருமக்களை ஆசிரியர் நாளில் வணங்கி மகிழ்கிறேன்.

அனைத்து ஆசிரியப்பெருமக்களுக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!

முந்தைய செய்திபல்லடம் படுகொலைகளுக்குக் காரணமான மதுவிற்பனையை தமிழ்நாடு அரசு முற்றிலுமாக நிறுத்தவேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திதுறையூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்