மே 01, உழைப்பாளர் நாள் விழா – தொழிசங்கப் பேரவை கொடியேற்றிய சீமான் – செய்தியாளர் சந்திப்பு

26

மே 01, உழைப்பாளர் நாள் விழா – தொழிசங்கப் பேரவை கொடியேற்றிய சீமான்

சுழலும் உலகின் அச்சாணியாய் திகழும் உழைக்கும் மக்களின் உரிமையை, தங்கள் இன்னுயிரை ஈகம் செய்து நிலைநிறுத்திய தொழிலாளர்களால், உலகளாவிய அளவில் தொழிலாளர்களின் உரிமை நிலைநாட்டப்பட்டதைப் போற்றும் விதமாக உலகெங்கும் உழைப்பாளர் நாளாகக் கொண்டாடப்படுகின்ற திருநாளான மே நாளையொட்டி, நாம் தமிழர் கட்சியின் தொழிற்சங்கப் பேரவை சார்பாக 01-05-2023 அன்று காலை 10 மணியளவில் கட்சித் தலைமை அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் உழைப்பாளர் நாள் விழா கொண்டாடப்பட்டது.

தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தொழிற்சங்கப் பேரவையின் கொடியேற்றி வைத்ததும், தொழிலாளர் ஈகத்தைப் போற்றி, தொழிலாளர் உரிமைகளை வென்றெடுக்க உறுதியேற்கப்பட்டது.

உடன், தொழிற்சங்கப் பேரவையின் மாநிலத் தலைவர் அன்புத்தென்னரசன், மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் சுரேஷ்குமார் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் இருந்தனர்.

சீமான் செய்தியாளர் சந்திப்பு: