க.எண்: 2023040146
நாள்: 05.04.2023
அறிவிப்பு:
தானி (ஆட்டோ) ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை மீட்க நடவடிக்கைகள் எடுக்கக்கோரியும், மீட்டர் கட்டணத்தை உயர்த்தக் கோரியும் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சியின் தொழிற்சங்கப் பேரவை சார்பாக,
தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், வருகின்ற 09-04-2023 ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணியளவில், சென்னை வள்ளுவர்கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.
தானி (ஆட்டோ) ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை மீட்க,
மீட்டர் கட்டணத்தை உயர்த்தக் கோரி
நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவை நடத்தும்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
கண்டனப் பேருரை:
செந்தமிழன் சீமான்
09-04-2023 ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணிக்குஇடம்:
வள்ளுவர் கோட்டம்
(சென்னை)
இம்மாபெரும் ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், தொழிற்சங்கப் பேரவை உள்ளிட்ட அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், தானி ஓட்டுநர்களும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி