தொல்தமிழர்களான குறவர்குடி மக்களுக்கு குடிச்சான்றிதழ் வழங்கக்கோரி நடைபெற்றுவரும் தொடர் போராட்டத்தில் செந்தமிழன் சீமான் பங்கேற்பு

132

க.எண்: 2023030085அ

நாள்: 04.03.2023

அறிவிப்பு:

தமிழர் தாய்குடியான குறிஞ்சி நில குறவர் குடிமக்களின் பள்ளி-கல்லூரி மாணவ மாணவிகளின் உயர்படிப்பிற்கும் வேலைவாய்ப்பிற்கும் பயன்படுத்தும் வகையில் நிரந்தரமாக ST/SC பட்டியல் பிரிவில் குடிச்சான்றிதழ் வழங்கக் கோரி, திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த குறவர் தொல்குடி மக்கள், திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டுவருவதையடுத்து, நாளை 05-03-2023 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 11 மணியளவில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள், போராடிவரும் அம்மக்களை நேரில் சந்தித்து, போராட்டத்திற்கு முழு ஆதரவளித்து, போராட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றவிருக்கிறார்.

தொல்தமிழர்களான குறவர்குடி மக்களுக்கு குடிச்சான்றிதழ் வழங்கக்கோரி

நடைபெற்றுவரும் தொடர் போராட்டத்தில்

செந்தமிழன் சீமான் பங்கேற்பு
05-03-2023 ஞாயிற்றுக்கிழமை, காலை 11 மணியளவில்

இடம்:
திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலக வளாகம்

இந்நிகழ்வில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், உடன்  பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

நாம் தமிழர் கட்சி